ஆனந்தபுரத்தில் மனித எலும்பு எச்சங்கள்!

You are currently viewing ஆனந்தபுரத்தில் மனித எலும்பு எச்சங்கள்!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் காணி ஒன்றில் இருந்து மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட போர் நடவடிக்கையின்போது உக்கிர போர் நடைபெற்ற ஆனந்தபுரம் கிஸ்ணர் கோவிலுக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸில் முன்வைக்கப்பட்ட முறைபாட்டிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனந்தபுரத்தில் மனித எலும்பு எச்சங்கள்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments