ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரணத்துக்கு 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ஒதுக்கீடு!

  • Post author:
You are currently viewing ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரணத்துக்கு 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ஒதுக்கீடு!

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ எரிந்து வருகிறது.
இந்த காட்டுத்தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள் செத்து மடிந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த காட்டுத்தீயால் அங்கு கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதனால் காட்டுத்தீயின் வேகம் குறைய தொடங்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே காட்டுத்தீ நிவாரண உதவிக்காக 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ஒதுக்கீடு செய்ய அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள