இங்கிலாந்தில் ஒரே நாளில் நாட்டில் 218,724 கொரோனா வைரஸ் தொற்று!

You are currently viewing இங்கிலாந்தில் ஒரே நாளில் நாட்டில் 218,724 கொரோனா வைரஸ் தொற்று!

இங்கிலாந்தில் கொவிட் தொற்று நோய் தொடங்கியதில் இருந்து முன்னொருபோதும் இல்லாதவாறு மிக அதிகளவு தொற்று நோயாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டனர்.

ஒரே நாளில் நாட்டில் 218,724 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொற்று நோய் தொடங்கியதில் இருந்து ஒரு நாள் தொற்று நோயாளர் தொகை 2 இலட்சத்தைக் கடந்ததும் இதுவே முதன்முறையாகும்.

இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் எண்ணிக்கை 1 கோடியே 36 இலட்சத்து 41 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 48 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த கொரோனா மரணங்களும் 1 இலட்சத்து 48 ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ள.

நிலைமை இவ்வாறு இருக்கையில் நாட்டில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கும் உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை என இங்கிலாந்து சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்தார்.

அமெரிக்கா செய்ததைப் போல தனிமைப்படுத்தல் காலத்தை ஏழு நாட்களில் இருந்து ஐந்து நாட்களாக குறைக்கும் திட்டமும் தமது அரசிடம் இல்லை எனவும் அவா் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனவரி அனைவருக்கும் கடினமான மாதமாக இருக்கும் என்பதை நாங்கள் எப்போதோ அறிந்திருந்தோம். அடுத்த சில வாரங்களில் நிலைமை தற்போதுள்ளதை விட மோசமாகும் என உத்தேச கணிப்பீடுகள் காட்டுவதாக இங்கிலாந்து பொது சுகாதார சேவை தலைமை நிர்வாகி கெவின் மெக்னாமரா தெரிவித்தார்.

இதற்கிடையில் தற்போதைய நிலை குறித்து கருத்து வெளியிட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், மிகத் தீவிரமாகப் பரவக் கூடிய ஒமிக்ரோன் அலைக்கு மத்தியில் வரும் வாரங்களில் சுகாதார சேவைகள் கடும் அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என அச்சம் வெளியிட்டார்.

நாடு முழுவதும் ஒமிக்ரோன் பரவல் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது என்பதில் சந்தேகமில்லை எனவும் அவா் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 90 வீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் முதல் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும் 82 சதவீதத்தினர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர் என சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், 59 வீதத்திற்கும் அதிகமானோர் பூஸ்டர் அல்லது மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments