இங்கிலாந்தை வீழ்த்தி ஐரோப்பிய கிண்ணத்தை கைப்பற்றியது இத்தாலி!

You are currently viewing இங்கிலாந்தை வீழ்த்தி ஐரோப்பிய கிண்ணத்தை கைப்பற்றியது இத்தாலி!

ஐரோப்பிய கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி, இத்தாலி அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 53 ஆண்டுகளுக்கு பின் இத்தாலி அணிக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

லண்டன் வெம்பிளே மைதானத்தில் 16-ஆவது ஐரோப்பிய கிண்ண கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டி இடம்பெற்றது.

உள்ளூர் ரசிகர்கள் வெள்ளத்தில் களமிறங்கிய நிலையில், ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார். முதல் பாதி ஆட்டத்தில் எவ்வளவோ முயன்றும் இத்தாலி அணி வீரர்களால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.

67-வது நிமிடத்தில் இத்தாலி வீரர் லியோனார்டோ போனூசி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். தொடர்ந்து இரு அணியினரும் அடுத்த கோல் அடிக்காத நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது.

கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 3-க்கு 2 என்ற கோல் வித்தியாசத்தில் இத்தாலி அணி வென்று ஐரோப்பிய கிண்ணத்தைக் கைப்பற்றியது.

1968-ஆம் ஆண்டுக்குப்பின் இத்தாலி அணி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவது இதுவே முதன்முறை என்பதால் இத்தாலி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடைசி வரை போராடியும் கோப்பையை வெல்ல முடியாததால் போட்டியைக் காண வந்த இளவரசர் வில்லியம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இங்கிலாந்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments