இத்தாலியிலும் புதியவகை “கொரோனா” வைரஸ் அவதானிப்பு!

You are currently viewing இத்தாலியிலும் புதியவகை “கொரோனா” வைரஸ் அவதானிப்பு!

“கொரோனா” வைரஸின் பிறழ்வடைந்த புதியவகை வைரஸ் இத்தாலியிலும் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பக்கட்டங்களில் அவதானிக்கப்பட்ட “கொரோனா” வைரஸை விட மிக வேகமாக பரவிவரும் பிறழ்வடைந்த இப்புதியவகை “கொரோனா” வைரஸ், இதுவரை, டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் ஏற்கெனவே அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது, இத்தாலியின் “Rome” நகரிலும் அவதானிக்கப்பட்டுள்ளதாக, இத்தாலிய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.

பகிர்ந்துகொள்ள