இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றேன் : டிரம்ப்!

  • Post author:
You are currently viewing இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றேன் : டிரம்ப்!

இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மனைவி மெலனியாவுடன் வருகிற 24-ந் திகதியும், 25-ந் திகதியும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த நிலையில்,  இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“நான் இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியாவுக்குச் செல்ல இருக்கிறேன். நான் இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றேன். இப்பயணத்தில் இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறவுள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள