இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை!

You are currently viewing இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை!

தமது சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் தவிர்க்கும் என நம்புவதாக சீனா தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வருவது தொடர்பில் இந்தியா வெளியிட்ட தகவலையை அடுத்தே, சீனா இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக ரொயிட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

சீனாவின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பல் யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 11 ஆம் திகதியன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அந்த கப்பல் அடையும் என்றும், ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை துறைமுகத்தில் தரித்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனக் கப்பலின் திட்டமிடப்பட்ட வருகை இதனையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சக பேச்சாளர் அரிந்தம் பாக்சி, சீனக் கப்பலின் திட்டமிடப்பட்ட வருகையை இந்திய அரசாங்கம் கண்காணித்து வருவதாக நேற்று கூறியிருந்தார். அத்துடன் புது தில்லி அதன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு அப்பால்,கப்பலின் வருகைக்கு எதிராக இந்தியா ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ரொயட்டர்ஸின் கேள்விக்கு பதிலளித்த சீனாவின் வெளியுறவு அமைச்சகம்இ தமது நாடு, எப்போதும் ஆழ்கடலின் சுதந்திரத்தை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சீனாவின் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை எதிர்ப்பை வெளியிடும் தரப்பினர் ஆய்வு செய்யவேண்டும் என்றும் தமது சாதாரண மற்றும் சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் தலையிடுவதை தவிர்ப்பார்கள் என்று தாம் நம்புவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments