இந்தியாவுடனான நெருங்கிய உறவே தமிழர்களை அழிக்க உதவியது. – லலித் வீரதுங்க

You are currently viewing இந்தியாவுடனான நெருங்கிய உறவே தமிழர்களை அழிக்க உதவியது. – லலித் வீரதுங்க

இந்தியாவுடனான நெருங்கிய உறவே விடுதலைப்புலிகளை தோற்கடிக்க உதவியது என  இனபப்டுகொலையலை கோட்டபாயவின்  சிரேஸ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா கையளித்த கொரோனா வைரஸ் மருந்துகள் குறித்த நிகழ்வு அங்கொட தொற்றுநோய் வைத்தியசாலையில் இடம்பெற்றவேளை லலித்வீரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுடன் யுத்தம் இடம்பெற்றவேளை பாதுகாப்பு செயலாளராக காணப்பட்ட கோத்தபாய ராஜபக்ச தான் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்தியாவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து விபரித்துள்ளார்.

இந்தபேச்சுவார்த்தைகளின் போது அனைத்து விடயங்களும் முன்வைக்கப்பட்டன இருதரப்பும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருந்தன என லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

எங்களால் வெல்ல முடியாது என அனைவரும் தெரிவித்த யுத்தத்தில் நாங்கள் வெற்றிபெறுவதற்கு இந்தியா உதவியது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா தற்போது இன்னொரு யுத்தத்தில் உதவுகின்றது கொரோனா வைரசிற்கு எதிரான யுத்தத்தில் உதவுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்

பகிர்ந்துகொள்ள