இந்தியா முழுவதும் மக்கள் முககவசம் அணிவது கட்டாயம் ; மத்திய உள்துறை!

  • Post author:
You are currently viewing இந்தியா முழுவதும் மக்கள் முககவசம் அணிவது கட்டாயம் ; மத்திய உள்துறை!

இந்தியா முழுவதும் பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் மக்கள் முககவசம் அணிவது கட்டாயம் என இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே நேற்று காலை உரையாற்றும்பொழுது, மே 3 ம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுகிறது என கூறினார். தொடர்ந்து அவர், ஏப்ரல் 20ந் திகதி வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். பின்னர் தளர்வுகள் இருக்கும் என கூறினார்.

இந்த நிலையில், ஊரடங்கு நீடிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மத்திய அரசு இன்று வெளியிட்டது. இதன்படி, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான பால், மளிகை, மருந்து, உணவு பொருட்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவைக்கு தடை தொடரும். மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மதவழிபாட்டு தலங்களுக்கும் தடை நீடிக்கின்றது.

நாடு முழுவதும் பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் மக்கள் முககவசம் அணிவது கட்டாயம் ஆகும். பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்படுகின்றது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள், பாதிப்பிற்காக முடக்கப்பட்ட மக்கள் வசித்த பகுதிகளில் தளர்வுகள் இல்லை. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இணைய வழி கல்வி நிறுவனங்கள் வகுப்புகளை நடத்தலாம். மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது. 100 நாள் வேலை திட்டத்துக்கும் அனுமதியளிக்கப்படுகின்றது.

பொது இடங்களில் துப்பினால் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். மாநிலங்கள், மாவட்டங்கள் இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள