இந்திய கறுப்புச்சந்தையில் “ஒக்சிஜன்” குடுவைகள்!

You are currently viewing இந்திய கறுப்புச்சந்தையில் “ஒக்சிஜன்” குடுவைகள்!

இந்திய ஒன்றிய மாநிலங்களில் “கொரோனா” தொற்றுதல் தீவிரமடைந்துள்ளதால் பெருவாரியான மரணங்கள் நிகழ்ந்துவரும் நிலையில், பல வைத்தியசாலைகளில் உயிர்வாயுவான “ஒக்சிஜன்” தட்டுப்பாடு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

உயிர்வாயு பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலைகளுக்கு கொண்டுவரப்படும் “கொரோனா” தொற்றாளர்கள், உயிர்வாயு கிடைக்கக்கூடிய வைத்தியசாலைகளை தேடித்தேடி அலையும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, உயிர்வாயு குடுவைகள் (ஒக்சிஜன் சிலிண்டர்கள்) கறுப்புச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சாதாரணமாக 6000 இந்திய ஒன்றிய ரூபாய்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு வாயுக்குடுவை, 50000 ரூபாய்கள் வரை விலை உயர்த்தி விற்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. உயிர்வாயுக்குடுவைகள் இல்லாமல் “கொரோனா” தொற்றாளர்கள் உயிர்பிழைக்க முடியாதென்ற நிலைமையில் அதிகவிலை கொடுத்தாவது கறுப்பு சந்தையில் உயிர்வாயுக்குடுவைகளை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய “ஸ்டெர்லைட் ஆலை”, உயிர்வாயு உற்பத்திக்காக திறக்கப்பட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்திய ஒன்றியத்தில் நிலவும் அவலநிலை காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் உடனடி உதவிகளை செய்வதற்கு முன்வந்துள்ளன.

https://www.nrk.no/urix/india_-pasienter-blir-kjort-fra-sykehus-til-sykehus-i-jakt-pa-oksygen-1.15470574

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments