இந்திய படகுகளின் இழுவை மடி தொழிலால் கடல்வளம் அழிக்கப்பட்டு கடற்தொழிலாளர்கள் பாதிப்பு!

You are currently viewing இந்திய படகுகளின் இழுவை மடி தொழிலால் கடல்வளம் அழிக்கப்பட்டு கடற்தொழிலாளர்கள் பாதிப்பு!

இந்திய படகுகளின் இழுவை மடி தொழிலால் கடல்வளம் அழிக்கப்பட்டு கடற்தொழிலாளர்கள் பாதிப்பு-முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் தெரிவித்துள்ளது.

இந்தி இழுவைபடகுகளின் அத்துமீறும் நடவடிக்கையினை கண்டித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவ சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் போது அரசாங்க அதிபருக்கு கொடுக்கப்பட்ட மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் மேலும் குறிப்பிடுகையில் 

இந்திய இழுவைப்படகுகள் எமது நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து எமது முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் இழுவை மடித்தொழிலை செய்து வருகின்றார்கள். இதனால் எமது மாவட்டத்தில் சிறுதொழிலில் ஈடுபட்டு வரும் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். 

இதனால், எமது கடற்றொழிலாளர்கள் பலருக்கு வலைகள் இல்லாமல் போயுள்ளது. அதுமட்டுமல்லாது இவர்களால்பாவிக்கப்படும் இழுவை மடிகளானது இரும்பு  சங்கிலிகளையும் இரும்பு வளையங்களையும் கொண்டுள்ளது.  இப்படியான இழுவை மடிகளை கடலினுள் போட்டு இழுக்கும் போது எமது கடல்வளங்கள் முழுமையாக பாதிப்படைகின்றது. குறிப்பாக மீன்கள் தங்கி வாழும் இடங்களான கடற்பாதைகள், கடற்தாவரங்கள் முற்றாக அழிக்கப்படுகின்றன.

இவர்களுக்கு மீன்பிடி தவிர்ந்த வேறு எந்தவிதமான வருமானமும் இல்லாதவர்கள். இதன்காரணமாகஎமது மீனவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். இவ்விடயம் தொடர்பாக கடந்த பத்து வருடங்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கடற்படையினரிடமும் அரசாங்கத்திடமும் பல தடவைகள் பல மனுக்களைக்கொடுத்தும் பல கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. 

இதனால் வருமானத்தை இழந்த எமது மீனவ மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிப்படைகின்றார்கள். என்றும்  குறித்த மனுவில்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி,பிரதமர்,அமைச்சர் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு குறித்த  மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள