இந்த ஆண்டின் மாவீரர்நாளில், களத்திலும். புலத்திலும் சொல்ல விளையும் செய்தி என்ன?

You are currently viewing இந்த ஆண்டின் மாவீரர்நாளில், களத்திலும். புலத்திலும் சொல்ல விளையும் செய்தி என்ன?

இந்த ஆண்டின் மாவீரர்நாளில், களத்திலும். புலத்திலுமான தமிழர்களின் மாபெரும் எழுச்சி, சொல்ல விளையும் செய்தி என்ன இவ்வெழுச்சியை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான விளைவாக மாற்ற முடியுமா கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழத்தில் சிறிலங்கா அரசின் நெருக்குவாரங்கள் காரணமாக , மாவீரர்நாள் வணக்க நிகழ்வுகளை மக்களால் நடாத்த முடியவில்லை.

அதன் பின்னரான காலங்களில் புலம்பெயர்தமிழர்களால் குறிப்பாக அனைத்துலக ரீதியில் செயற்படும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு போன்ற வீரியமிக்க அமைப்புகளாலும், தமிழர் அரசியல் இராசதந்திரக் கட்டமைப்புகளாலும், நாடுகள் தோறும் முன்னெடுக்கப்பட்ட அறவழிப் போராட்டங்கள், அரசியல், இராசதநீதிர சந்திப்புகள் , தாயத்தில் இன்றுவரை தொடரும் தமிழின அழிப்பு தொடர்பான பரப்புரைகள் காரணமாக சிறிலங்கா அனைத்துலகிலும் தனது செல்வாக்கை இழந்து மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியது.

அத்துடன் கடந்தகாலங்களில் இனஅழிப்புப் போரிற்காக சிறிலங்கா அரசு கடன்வாங்கி செலவு செய்த நிதியம், இன்னும் பாதுகாப்பு செலவினங்களிற்காக ஒதுக்கப்படும் நிதி, கொரோனா பேரிடர் இவற்றின் தாக்கங்களும் சேர்ந்து சிறிலங்காவை மீள முடியாத பொருளாதார பின்னடைவில் சிக்க வைத்தது. தவிர போரில் இறந்தவர்களையே நினைவு கூர விடாது சிறிலங்கா மிகப்பெரும் மனித உரிமை மீறலைச் செய்கிறது என அனைத்துலக மனிதநேய அமைப்புகளும் அழுதீதம் கொடுக்க தவறவில்லை. எனவே இவ்வகையான பல்வகை நெருக்கடிகளிலிருந்து சற்றும் மீளலாம் என சிறிலங்காவை ஒரு முடிவை எடுக்க வைத்த கருவி.

பிரபாகரன் சிந்தனை என்னும் போராயுதம். 2008 மாவீரர்நாளில் தேசியத்தலைவரின் உரையில் சிறிலங்காவிற்கு ஏற்படப் போகும் பின்னடைவை தெளிவாக குறிப்பிட்டிருந்தார் எமது தேசியத்தலைவர். அதை செவிமடுத்திருந்தால் இன்று சிறிலங்கா தப்பிப் பிழைத்திருக்கும். விடயத்திற்கு வருவோம் .

மாவீரர்நாள் எழுச்சியானது தன்னெழுச்சியாக நிகழ்ந்தது . மாவீரர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் இவாற்றின் மொத்த வடிவமே தமிழரின் இக்கால எழுச்சி. சிறிலங்காவோ. இந்தியாவோ. மேற்கின் சில நாடுகளோ இதனை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனை மேற்கின் இராசதந்திரிகளுடன் இப்போது நடைபெறும் சந்திப்புகளில் எம்மால் உணர முடிகின்றது . ஆனால் இந்த எழுச்சியை மழுங்கடிக்க அல்லது நீர்த்துப்போகச் செய்ய. சிறிலங்கா தனது பரிவாரங்களை களத்தில் இறக்கி விட்டது . இதில் இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் வகிபாகங்களை செய்யத் தவறவில்லை.?சிறிலங்காவிற்கு பாரிய நெருக்கடியை கொடுக்கும் தமிழின அழிப்பு என்னும் ஆயுதத்தை செயலிழக்க செய்வது. தமிழின அழிப்பிற்கான நீதி,பொறுப்புக் கூறல் என்ற விடயத்தை கைவிட்டு தீர்வுத்திட்டம் என்னும் விடயத்திற்கு நேரடியாக தாவுவது. இவைதான் சிறிலங்காவினால் தற்போது கருத்துருவாக்கம் செய்யப்படும் விடயங்கள்.

இதன் பின்னணி வழங்கள் தளங்களாக. சமாதானப் பேச்சுக்களின் போது இடைத்தரகர்களாக இருந்த ஸ்கன்டிநேவியர்கள் முதல், சில மதகுருமார், தமிழ்க்கட்சிகள் சில, மக்களால் நிராகரிக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் என அணிவகுதீது நிற்கின்றனர். எனவே விழிப்பே விடுதலையின் முதற்படி என்பதற்கமைய அரசியல் தெளிவோடு நாம்ஒன்றிணைந்து செயற்பட்டால் இவற்றையெல்லாம் முறியடிக்கலாம் . ஆக மொத்தத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தியாகங்களும் வீரவரலாறுகளும் மக்களையும் இளையோரையும் மீண்டும் எழுச்சி பெறவைக்கத் தவறவில்லை. எனவே இந்த எழுச்சியை விளைச்சலாக மாற்ற தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இயங்கு சக்திகள் காத்திரமான செயற்திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments