தமிழினவழிப்பாளி கோத்தபாயவின் வருகைக்கு எதிராக பெல்சியத்தில் நடைபெற்ற போராட்டம்!

You are currently viewing தமிழினவழிப்பாளி கோத்தபாயவின் வருகைக்கு எதிராக பெல்சியத்தில் நடைபெற்ற போராட்டம்!

தமிழினவழிப்பாளி வருகையினை எதிர்த்து பெல்சியத்தில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமும் மனு கையளிப்பும் இன்று (29/10/2021) சிறப்பாக நடைபெற்றது.

தமிழினப் படுகொலையாளி கோத்தபாய ராயபக்சேவின் Scotland நாட்டின் வருகையினை எதிர்த்தும், தமிழினப் படுகொலையினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரித்து நியாயமான தீர்வு எட்டப்பட வேண்டும். தமிழர்களின் பூர்வீக நிலமாக இருக்கக்கூடிய தமிழீழமே தமிழர்களுக்கு உறுதியான தீர்வு என்பதனையும் பறைசாற்றிய படி கவனயீர்ப்பு போராட்டம் பெல்சியத்தின் தலைநகரில் அமைந்துள்ள பிரித்தானியாவின் தூதரகம் முன்றலில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பெல்சியம் கட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று 29/10/2021  நடைபெற்றது.

இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழினப் படுகொலையின் ஆதாரப்படங்கள் தாங்கியும் வாழிட மொழிகளில் எமது வேணவாக்களினை எடுத்துரைத்தும் பெல்சியம் வாழ் தமிழ் மக்கள் எழிச்சிமிக பங்களித்திருந்தார்கள். எதிர்வரும் 01/11/2021 Scotland நாட்டில் நடைபெற இருக்கும் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் தமிழினப் படுகொலையாளியின் சிங்கள அரசப் பொய் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும். பிற நாடுகள் தமிழர்களின் வேணவாவினை செவிசாய்த்து  தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனையும் ஏற்றுகொள்தல் அவசியம்.  எனவே அனைத்து தமிழ் மக்களும் தொடர்ந்தும் காலம் தந்திருக்கும் இவ்வாய்ப்பின் மூலம் அறவழிப்போராட்டங்ககளை முன்னெடுத்து தமிழர்களுக்கான நிரந்தர தீர்வான சுதந்திர தமிழீழம் நோக்கி மேலும் வேகமாக நகர்வோம்.

நன்றி,

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழினவழிப்பாளி கோத்தபாயவின் வருகைக்கு எதிராக பெல்சியத்தில் நடைபெற்ற போராட்டம்! 1
தமிழினவழிப்பாளி கோத்தபாயவின் வருகைக்கு எதிராக பெல்சியத்தில் நடைபெற்ற போராட்டம்! 2
தமிழினவழிப்பாளி கோத்தபாயவின் வருகைக்கு எதிராக பெல்சியத்தில் நடைபெற்ற போராட்டம்! 3
தமிழினவழிப்பாளி கோத்தபாயவின் வருகைக்கு எதிராக பெல்சியத்தில் நடைபெற்ற போராட்டம்! 4
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments