இனவழிப்பு படைகளில் இதுவரை 136 பேருக்கு தொற்று!

You are currently viewing இனவழிப்பு படைகளில் இதுவரை 136 பேருக்கு தொற்று!

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் -19 தொற்று காரணமாக இன்று காலை வரையிலான காலப்பகுதியில் 136 இனவழிப்பு படையினர் தொற்றுக்குள்ளாகியதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் பலர் வெலிசறை கடற்படை முகாமில் சேவையாற்றியவர்கள் என தெரிவிக்கும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா, அவர்களில் 27 பேர் விடுமுறைகளில் வீடு சென்றிருந்த நிலையில், அவ்வந்த பிரதேச வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறினார்.

இதனிடையே, வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவரின் கணவரான, சீதுவை இராணுவ முகாமின் கெப்டன் தர அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அந்த முகாம் முற்றாக முடக்கப்பட்டு அங்கு சுமார் 150 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனை விட, விடுமுறைக்காக தனது வீட்டுக்கு சென்றிருந்த பனாகொட இராணுவ முகாமின் சிப்பாய் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது. குருணாகல் – அலவ்வை பகுதியை சேர்ந்த குறித்த சிப்பாய்க்கு குருணாகல் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது அது உறுதி செய்யப்ப்ட்டுள்ளது.

சிறீலங்கா முழுவதும் உள்ள படை முகாம்களில் இதுவரை 136 இனவழிப்பு படையினரை கொரோனா தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள