இன்றைய விடுதலை தீபங்கள்!

You are currently viewing இன்றைய விடுதலை தீபங்கள்!
இன்றைய விடுதலை தீபங்கள்! 1

அன்றைய நினைவுகளில் இருந்து…திருகோணமலையில் கடந்த சனிக்கிழமை (2008) நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை வலுவாக கட்டியமைத்து, கரும்புலி வீரர்களை வழி அனுப்பியவர் லெப். கேணல் கடாபி என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவில்    2008 அன்று நடைபெற்ற லெப். கேணல் கடாபியின் வீரவணக்கக் கூட்டத்தில் வீரவணக்க உரையாற்றிய கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை மேலும் தெரிவித்துள்ளதாவது

15 ஆண்டுகளுக்கும் மேலாக எமது விடுதலைப் போராட்டத்தில் தமிழின விடுதலைக்காக பல்வேறு துறைகளில் உழைத்தவர் லெப். கேணல் கடாபி.1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல களமுனைகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தியவர்.இவரின் திட்டமிடலாலும், பற்றினாலும் கடற்புலிகளின் முதன்மை இயந்திரப் பொறியியலாளராக நியமிக்கப்பட்ட இவர், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உள்ளத்தில் ஆழமாக இடம்பிடித்த ஒரு போராளி.தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்பரப்பில் பயிற்சிப் படகுகளை பார்வையிடுவதிலும், தலைவர் அருகிருந்து படகைச் செலுத்தும் இயந்திர வல்லுனராகவும் இருந்தார்.

இன்று அதிகாலை திருகோணமலையில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை வலுவாக கட்டியமைத்து கரும்புலி வீரர்களை வழியனுப்பியவர் கடாபி.ஒரு காலை இழந்த போதிலும் தொடராக விடுதலைப் பயணத்திற்கு ஓய்வின்றி உழைத்த ஒரு விடுதலை வீரன் என்றார் அவர்.இந்நிகழ்வு முல்லை மாவட்ட கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் வேங்கைத்தமிழன் தலைமையில் நடைபெற்றது.

பொதுச்சுடரினை கடற்புலிகளின் தாக்குதல் தளபதி கங்கா ஏற்ற, வித்துடலுக்கு ஈகைச்சுடரினையும் மலர்மாலையினையும் தாயார், உடன்பிறப்புக்கள் சூட்டினர். மலர்மாலைகளை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை, கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன் ஆகியோர் சூட்டினர்.வீரவணக்க உரைகளை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை, முல்லை மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர் குணசிங்கம் ஆகியோர் ஆற்றினர்.

————————————————————————————————— 

லெப்டினன்ட் அறிவுச்செல்வன்பாலகிரிதரன் ஜெனார்த்தனன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 08.05.2007 

மேஜர் இளங்கோஇராசா கெங்காதரன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 08.05.2007 

மேஜர் மதன்சுப்பிரமணியம் திருமுருகன்கௌதாரி முனை, பூநகாி கிளிநொச்சிவீரச்சாவு: 08.05.2007 

2ம் லெப்டினன்ட் யாழ்வேந்தன்விஜயரட்ணம் சங்கரன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 08.05.2007 

2ம் லெப்டினன்ட் தயாகாந்தன்நல்லதம்பி சுதாகரன்ஈச்சந்தீவு, நாவற்காடு, மட்டக்களப்புவீரச்சாவு: 08.05.2001 

வீரவேங்கை அருந்தாதணிகாசலம் ஜனந்தினிவட்டுவாகல், முல்லைத்தீவுவீரச்சாவு: 08.05.2000

 எல்லைப்படை வீரவேங்கை தவலோசன்தர்மராசா தவலோசன்வறுத்தலைவிளான், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்வீரச்சாவு: 08.05.2000 

மேஜர் சதார்த்தனன் (ராம்)தர்மலிங்கம் கணேசமூர்த்திசித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்புவீரச்சாவு: 08.05.2000 

2ம் லெப்டினன்ட் நற்றவன்இராசரத்தினம் சாந்தரூபன்புலோப்பளை மேற்கு, யாழ்ப்பாணம்வீரச்சாவு: 08.05.2000 

2ம் லெப்டினன்ட் அறிவரசன்சுப்பிரமணியம் சிவலோகநாதன்திருகோணமலைவீரச்சாவு: 08.05.2000 

கப்டன் குணபால்செல்லக்குட்டி புலேந்திரன்பாட்டாளிபுரம், மூதூர், திருகோணமலைவீரச்சாவு: 08.05.1999 

2ம் லெப்டினன்ட் செந்தில்சோமசுந்தரம் தவபாலன்சின்னப்பனங்காடு, அக்கரைப்பற்று, அம்பாறைவீரச்சாவு: 08.05.1996 

2ம் லெப்டினன்ட் சொரூபன் (சுபாஸ்)சிவலிங்கம் சிவதாசன்கொக்குவில், மட்டக்களப்புவீரச்சாவு: 08.05.1995 

கப்டன் ரவிபாலசிங்கம் ஜெயக்குமார்கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்வீரச்சாவு: 08.05.1991 

வீரவேங்கை மனோஜ்கந்தையா ஜெயக்குமார்குடத்தனை மேற்கு, மருதங்கேணி, யாழ்ப்பாணம்வீரச்சாவு: 08.05.1991

 வீரவேங்கை கர்ணன்நாகரத்தினம் துஸ்யந்தன்நெடுந்தீவு, யாழ்ப்பாணம்வீரச்சாவு: 08.05.1990 

வீரவேங்கை ஜனாயோகசுந்தரம் ஐங்கரன்அலுக்கை, அளவெட்டி, யாழ்ப்பாணம்.வீரச்சாவு: 08.05.1989 

வீரவேங்கை நடாமுத்துப்பிள்ளை சந்திரன்கழுவங்கேணி, மட்டக்களப்பு.வீரச்சாவு: 08.05.1987 

வீரவேங்கை சுதாஜயாத்துரை சுதாகரன்வந்தாறுமூலை, மட்டக்களப்பு.வீரச்சாவு: 08.05.1987 

வீரவேங்கை தம்பிஇராசமணி தவராசாவந்தாறுமூலை, மட்டக்களப்பு.வீரச்சாவு: 08.05.1987 

வீரவேங்கை ரகுமான் வீரச்சாவு: 08.05.1986 

வீரவேங்கை யூலின் வீரச்சாவு: 08.05.1986 வீரவேங்கை ரகீம் வீரச்சாவு: 08.05.1986


தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

பகிர்ந்துகொள்ள