இன்றைய விடுதலை தீபங்கள்!

You are currently viewing இன்றைய விடுதலை தீபங்கள்!

கடற்கரும்புலி மேஜர் நாவலன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி, கடற்கரும்புலி கப்டன் வானதி வீரவணக்க நாள் இன்றாகும்.

முல்லை கடற்பரப்பில் 24.03.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் “பராக்கிரமபாகு” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நாவலன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி, கடற்கரும்புலி கப்டன் வானதி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


விடுதலைப் புலிகளின் சாலைக் கடற்படைத் தளம் மீது தாக்குதல் செய்வதற்கான பெரும் கடற்கலங்கள் என பலமான நிலையில் வந்த சிறிலங்கா கடற்படையினர் மீது மூண்ட கடற்சமரில் தாக்குதலில் இலக்காக “பராக்கிரமபாகு” கப்பல் தேர்வாகி அதன் மீது தாக்குதல் நடத்த டோறாக் கலங்களை ஊடறுத்து விரைந்த கரும்புலிப் படகுகள் மீது பராக்கிரமபாகு கப்பலிருந்து மேற்கொள்ளப்பட்ட பீரங்கி சூட்டாதரவால் இலக்கை எட்ட முன்பே கரும்புலிப் படகு தீப்பற்றி வெடித்ததில் நான்கு கடற்கரும்புலிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொள்கின்றனர்.

ஐந்தரை மணிநேரச் சண்டையில் இவர்களுடன் லெப்டினன்ட் சுகுணன் (மாவேந்தன்) எனும் கடற்புலிப் போராளியும் கடலிலே காவியம் படைத்தார்.

வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்

இன்றைய விடுதலை தீபங்கள்! 1
இன்றைய விடுதலை தீபங்கள்! 2
இன்றைய விடுதலை தீபங்கள்! 3
இன்றைய விடுதலை தீபங்கள்! 4

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

பகிர்ந்துகொள்ள