“இறுதி மூச்சுவரையில் துணிந்து போராடுவோம்” – ஜெலென்ஸ்கி பேச்சு: சிலிர்த்துப்போன பிரித்தானிய எம்.பிக்கள்!

You are currently viewing “இறுதி மூச்சுவரையில் துணிந்து போராடுவோம்” – ஜெலென்ஸ்கி பேச்சு: சிலிர்த்துப்போன பிரித்தானிய எம்.பிக்கள்!

பிரித்தானிய நாடாளுமன்ற அவையில் காணொளி ஊடாக உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பேச்சுக்கு சிலிர்த்துப் போன எம்.பிக்கள் எழுந்து நின்று ஆதரவளித்துள்ளனர். உக்ரைனில் உள்ள தமது அலுவலகத்தில் இருந்து காணொளி ஊடாக உரையாற்றிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இந்த போரில் நாங்கள் தோற்றுவிடவோ கைவிடவோ மாட்டோம் எனவும், இறுதி மூச்சுவரையில் போரிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

70 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிட்லருக்கு எதிராக பிரித்தானியா போராடியதை ஒப்பிட்டு பேசிய ஜெலென்ஸ்கி, அதே சூழலில் தற்போது ரஷ்யாவுடன் தாங்கள் போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.

எங்கள் மண்ணைக் காக்க இறுதி மூச்சுவரையில் துணிந்து போராடுவோம் என ஜெலென்ஸ்கி ஆவேசமாக தெரிவித்துள்ளார். கடந்த 13 நாட்களில் ரஷ்ய துருப்புகளின் தாக்குதலில் 50கும் மேற்பட்ட உக்ரேனிய சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜெலென்ஸ்கி, நாங்கள் இந்த போரை முன்னெடுக்கவில்லை, நாங்களாகவே போருக்கும் செல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உக்ரைன் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் ஒருமுறை ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ளார். குறித்த கோரிக்கை பிரித்தானியா மற்றும் நேட்டோ நாடுகளால் நிராகரிக்கப்பட்டதுடன், அது ஐரோப்பா முழுவதுமான போருக்கு காரணமாகலாம் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

பிரித்தானியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, மேலதிக ஆதரவு தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஜெலென்ஸ்கியின் பேச்சு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் இதயத்தையும் தொட்டுவிட்டது என குறிப்பிட்டுள்ள பிரதமர் போரிஸ் ஜோன்சன்,

தங்கள் வீட்டையும் குடும்பத்தினரையும் ரஷ்ய தாக்குதலில் இருந்து காப்பாற்ற போராடும் உக்ரைனிய மக்களின் போராட்டம் மில்லியன் கணக்கான மக்களை ஊக்குவிப்பதாக அமையும் என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments