இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ள முன்னணி நாடுகள்!

You are currently viewing இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ள முன்னணி நாடுகள்!

ரஷ்யாவின் மிகப்பெரிய சார்ட்டர் விமான நிறுவனமான Azur Air மற்றும் பிரான்சின் Air France நிறுவனங்கள் இந்த வாரம் முதல் இலங்கைக்கான விமானங்களை மீண்டும் தொடங்குகின்றன. அஸூர் ஏர் இன்று (நவம்பர் 03) முதல் இலங்கைக்கான விமானங்களைத் தொடங்கும் அதே வேளையில் ஏர் பிரான்ஸ் வெள்ளிக்கிழமை (நவம்பர் 04) முதல் விமானங்களைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனமான சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், நவம்பர் 10 முதல் மே 2023 வரை வாராந்திர விமானங்களுடன் மீண்டும் இலங்கையில் அதன் சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக, ட்விட்டரில் இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்தார்.

இது சீசனுக்கான ஐரோப்பிய வருகையை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

ரஷ்யாவின் முதன்மை கேரியர் Aeroflot கடந்த மாதம் மாஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவையை 4 மாதங்கள் கழித்து மீண்டும் தொடங்கியது.

இதற்கிடையில், ஏர் பிரான்ஸ் மற்றும் கேஎல்எம் ஏர்லைன்ஸ் கொழும்புக்கான விமானங்களை மீண்டும் தொடங்கும் என்றும், அந்த விமான நிறுவனங்கள் வாரத்திற்கு நான்கு விமானங்களை இலங்கைக்கு இயக்கும் என்றும் அமைச்சர் பெர்னாண்டோ சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments