இலங்கைக்கு பெருந்தொகை யூரோக்களை வழங்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

You are currently viewing இலங்கைக்கு பெருந்தொகை யூரோக்களை வழங்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டு மக்களைப் பாதிக்கும் சமூக பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்களின் உடனடித் தேவைகளான உணவு, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு போன்றவற்றுக்கு இந்தப் பணம் வழங்கப்பட உள்ளதுடன், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட உள்ளன.

இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்கள் சமூக பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நெருக்கடி முகாமைத்துவ ஆணையாளர் ஜெனஸ் லெனாசிக் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய மனிதாபிமான நிதியத்தின் மூலம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments