இலங்கையின் இந்த நிலைக்கு ரஷ்யாவே காரணம்: ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு!

You are currently viewing இலங்கையின் இந்த நிலைக்கு ரஷ்யாவே காரணம்: ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாவின் போர் நடவடிக்கையே காரணம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். சியோவில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் பேசிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய தந்திரோபாயங்களில் ஒன்று பொருளாதார அதிர்ச்சி என தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனின் மீதான படையெடுப்பில் ரஷ்ய ராணுவம் தடுத்து வைத்துள்ள உணவு தானிய பொருள்கள் உலகம் முழுதுவம் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.

விநியோகச் சங்கலியில் நிலவும் நெருக்கடி மற்றும் சீர்குலைவு காரணமாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை சந்திக்கும் நாடுகள் அமைதியின்மைக்கு தள்ளப்படுகின்றன.

ரஷ்யாவின் போர் நடவடிக்கை என்பது உக்ரைனுக்கு மட்டும் பாதிப்பை தரவில்லை, உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், அதிர்ச்சியூட்டும் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஒரு சமூக வெடிப்புக்கு வழிவகுத்தது.

இவை எப்படி முடிவடையும் என்று இப்போது யாருக்கும் தெரியாது. இருப்பினும், உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளிலும் இதேபோன்ற வெடிப்புகள் சாத்தியமாகும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments