இலங்கையில் உணவுப் பஞ்சம் – கனேடியர்களுக்கு பயண ஆலோசனை!

You are currently viewing இலங்கையில் உணவுப் பஞ்சம் – கனேடியர்களுக்கு பயண ஆலோசனை!

இலங்கையில் நிலவும் சீரற்ற பொருளாதார நிலைமை காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்படும் என கனடா இலங்கைக்கு பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

இலங்கையில் பொருளாதாரம் மோசமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக மருந்துகள், எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் கனடா தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“மளிகைக் கடைகள், எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசைகள் இருக்கலாம். மின்சாரம் துண்டிப்பு மேற்கொள்ளப்படலாம். பொருளாதார ஸ்திரமின்மை சுகாதாரம் உட்பட பொது சேவைகளை வழங்குவதையும் இது பாதிக்கலாம்” என்று கனடா தனது பயண ஆலோசனையில் எச்சரித்துள்ளது.

கனேடிய அரசாங்கம் இலங்கைக்கு பயணிக்கும் தனது குடிமக்களிடம் உணவு, நீர் போன்றவற்றை கையில் வைத்திருக்குமாறும், போதியளவு மருந்துகளை கைவசம் வைத்திருக்குமாறும், உள்ளூர் ஊடகங்களை கண்காணிக்குமாறும் கூறியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments