இலங்கையில் தொற்று அதிகரிக்கும் ஆபத்து குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

You are currently viewing இலங்கையில் தொற்று அதிகரிக்கும் ஆபத்து குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

இலங்கை உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொவிட் 19 தொற்று நோய் மீண்டும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இலங்கையில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு மக்கள் அதிகளவில் ஒன்றுகூடிவரும் நிலை அவதானிக்கப்படுகிறது. அத்துடன், பொது சுகாதார நடைமுறைகள் சீராகப் பேணப்படவில்லை. சமமற்ற தடுப்பூசி பகிர்வு உள்ளிட்ட காரணிகளால் ஆபத்தான டெல்டா திரிபு மிகவும் வேகமாகப் பரவும் அபாய நிலை உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகம் இன்று காலை தனது உத்தியோகபூா் ருவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொற்று நோயைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களில் இலங்கை எடுத்த கடுமையான முயற்சிகளின் பலாபலன்களை தற்போதைய நடவடிக்கைகளால் இழந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாறான கட்டுப்பாடற்ற போக்குகளால் தொற்று நோய் அதிகரித்து மருத்துவமனைகள் முற்றாக பராமரிப்பு திறனை இழக்கும் நிலை ஏற்படும் எனவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் உலகம் முழுவதும் கடந்த வாரத்தில் 40 இலட்சம் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்தார். இவற்றில் பெரும்பாலாவை டெல்டா உரு திரிபு வைரஸூடன் தொடர்புடயவை எனவும் அவா் தெரிவித்தார்.

தற்போதைய போக்கு தொடர்ந்தால் அடுத்த இரண்டு வாரங்களில் உலகில் மொத்த தொற்று நோயாளர் தொகை 200 மில்லியனைக் கடந்து அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments