இலங்கையை ஐசிசியிடம் பாரப்படுத்துமாறு கனேடியப் பிரதமரிடம் கோரிக்கை!

You are currently viewing இலங்கையை  ஐசிசியிடம் பாரப்படுத்துமாறு கனேடியப் பிரதமரிடம் கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கனடாவின் தமிழ் அமைப்புகளும் ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதியும் கூட்டாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான முதன்மை நாடுகளின் குழுவில் கனடா காணப்படுவதால் இலங்கை தொடர்பான தீர்மானத்தை உருவாக்குவதில் கனடா முக்கிய பங்கை வகிக்கின்றது என கனடா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான முதன்மை நாடுகளின் குழுவில் கனடா காணப்படுவதால் கனடாவை சேர்ந்த குழுக்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வு குறித்தும் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளிற்கு பொறுப்புக்கூறுவதில் தொடர்ச்சியாக தோல்வியேற்படுவது குறிpத்த எங்கள் கரிசனையை தெரியப்படுத்துவதற்காக உங்களிற்கு இந்த கடிதத்தை எழுதுகின்றோம்,என தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கனடா பிரதமருக்கான கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இலங்கை தமிழ் சமூகத்தின் பெரும்பான்மையான தரப்பினரும் இலங்கையை ஐநா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டிய அவசர நிலைமை தொடர்பில் இலங்கை தொடர்பான முதன்மை நாடுகளை தொடர்புகொண்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் இந்த அமர்வில் ஐநா தீர்மானங்களை இலங்கை நிறைவேற்றியுள்ளதா என்பது குறித்து மதிப்பிடப்படும். 2021 ம் ஆண்டு மார்ச் மாத அறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்தபடி மனித உரிமைகளிற்கான ஐக்கியநாடுகளின் நான்கு முன்னாள் ஆணையாளர்களும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அறிக்கைகளை வெளியிட்ட 9 அறிக்கையாளர்களும் இலங்கை தொடர்பான ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த அனைத்து உறுப்பினர்களும் பரிந்துரைத்தபடி இலங்கயை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கும் வலுவான தீர்மானத்தை 13 வருடங்களிற்கு முன்னர் குற்றங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்காக சமர்ப்பிக்குமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கும் நடவடிக்கைக்கு குறைவான நடவடிக்கை எதுவும் எங்கள் மக்கள் எதிர்கொண்ட பாரிய அநீதிக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்துவிடும் என கனேடியர்களாகிய நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கும் நடவடிக்கைக்கு குறைவான நடவடிக்கைகள் இலங்கை அதிகாரிகளும் பாதுகாப்பு படையினரும் எந்த தயக்கமும் இன்றி இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக பாரிய அநீதிகளில் ஈடுபடும் நிலையை ஏற்படுத்தும்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments