இலங்கை தரப்பினர்  பொறுப்புடனும் , அர்ப்பணிப்புடனும் செயற்பட்டால் தன்னாலும் இவ்விடயத்தில் நேரடி தலையீட்டினை வழங்க முடியும் 

You are currently viewing இலங்கை தரப்பினர்  பொறுப்புடனும் , அர்ப்பணிப்புடனும் செயற்பட்டால் தன்னாலும் இவ்விடயத்தில் நேரடி தலையீட்டினை வழங்க முடியும் 

எரிபொருள் மற்றும் உரம் என்பவற்றை பெற்றுக் கொள்ளும் விடயத்தில் இலங்கை தரப்பினர் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும் பட்சத்தில் அதற்கு தனது அதிகபட்ச ஒத்துழைப்பினை வழங்க தயாராக இருப்பதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெடெரி , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி , ரஷ்ய அரசாங்கம் எதிர்பார்க்கும் சாதகமான பதிலை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்ய தூதுவரிடம் உறுதியளித்துள்ளார்.

எரோபுளொட் விமானம் தொடர்பில் உருவாகியிருந்த சர்ச்சைக்குரிய நிலைமையை சீராக்கும் நோக்கத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டீனுக்கு கடந்த 5 ஆம் திகதி கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த கடிதத்தில் , இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் இந்நாட்டுக்கு வருகை தருவதற்கு அதிகளவில் பயன்படுத்தும் ரஷ்ய தேசிய விமான சேவையின் வருகை தடுக்க வேண்டாம் என்று கோரியிருந்தார்.

குறித்த விமான சேவையின் வருகை தடுக்கப்பட்டால் அது இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் அந்நிய செலாவணி என்பவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெடெரியினால் ரஷ்ய ஜனாதிபதியின் பதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

குறித்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் வெகு விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து சாதகமான பதிலை ரஷ்ய அரசாங்கம் எதிர்பார்க்கும் வகையில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து சாதகமான பதிலை ரஷ்ய அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக ரஷ்ய தூதுவர் இதன் போது குறிப்பிட்டார்.

மேலும் எரிபொருள் மற்றும் உரப்பிரச்சினை தொடர்பில் சாதகமான முறையில் ஆராய முடியும் என்ற போதிலும், இலங்கை தரப்பினர் இவ்விடயத்தில் சிறந்த தலையீட்டினை மேற்கொள்ளவில்லை.

எனவே இலங்கை தரப்பினர் இதனை விட பொறுப்புடனும் , அர்ப்பணிப்புடனும் செயற்பட்டால் தன்னாலும் இவ்விடயத்தில் நேரடி தலையீட்டினை வழங்க முடியும் என்றும் ரஷ்ய தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் விடயங்கள் தொடர்பில் தூதுவர் நீண்ட நேரம் கலந்துரையாடியதோடு , இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் நட்புறவு சேதமடையாமல் எதிர்காலத்திலும் தொடர வேண்டியதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

எரோபுளொட் விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அவசியமான ரஷ்ய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் இணக்கப்பாட்டினை எட்டுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டினை எதிர்பார்ப்பதாகவும், வெகுவிரைவில் இந்த இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments