இலங்கை தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ரஷ்யா!

You are currently viewing இலங்கை தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ரஷ்யா!

ரஸ்யாவின் ஏரோஃப்ளோட் விமானத்தினை இலங்கை தடுத்து வைத்துள்ளமை குறித்து ரஸ்ய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவர் ஜனித்த அபயவிக்கிரம லியனகேயை நேரில் அழைத்து ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஜூன் மூன்றாம் திகதி ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவர் வெளிவிவகார அமைச்சிற்கு நேரில் அழைக்கப்பட்டார் என ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூன் இரண்டாம் திகதி ரஸ்யாவின் ஏரோஃப்ளோட் விமானத்தை கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் தடுத்து வைத்திருக்கவேண்டும் என நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு குறித்து இலங்கை தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது

இரு நாடுகளிற்கும் இடையிலான பாரம்பரிய நல்லுறவிற்கு பாதிப்பு ஏற்படுவதைதவிர்ப்பதற்காக இந்த விவகாரத்திற்கு உடனடியாக தீர்வை காணுமாறு இலங்கை அதிகாரிகளை கேட்டுக்கொண்டோம் என ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை

ஸ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் இலங்கைக்கான தனது சேவைகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகள் தங்களது எயர்பஸ் ஏ330ஜெட் விமானத்தினை தடுத்து வைத்துள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஏரோஃப்ளோட் அறிவித்துள்ளது.

விமானத்தின் இலங்கைக்கான தடையற்ற பயணம் குறித்து உறுதியற்ற நிலை காணப்படுவதால் இலங்கைக்கான விமான சேவையை உடனடியாக நிறுத்துவதாக அறிக்கையொன்றில் ஏரோஃப்ளோட் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பயணத்திற்கான விமான பயணச்சீட்டுகள் விற்பனை இடைநிறுத்தப்படுவதாகவும் ஏரோஃப்ளோட் அறிவித்துள்ளது.

ஜூன் இரண்டாம் நான்காம் ஐந்தாம் திகதிகளில் கொழும்பிலிருந்து பயணிப்பதற்கான விமான பயணச்சீட்டுகளை கொண்டுள்ள பயணிகள் இன்றும் நாளையும் இலங்கையிலிருந்து அழைத்து வரப்படுவார்கள் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்களை கொண்டு வருவதற்கான விமானங்கள் கொழும்பிற்கு பயணிகள் இன்றி செல்லவுள்ளன எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐந்தாம் திகதிக்கு பின்னர் மொஸ்கோவிற்கு வருவதற்காக விமான பயணச்சீட்டுகளை பெற்றுள்ள பயணிகளும் திட்டமிட்டபடி அழைத்து வரப்படுவார்கள் என ஏரோஃப்ளோட் தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments