இலத்திரனியல் திருடர்கள் பற்றி அவதானம் தேவை! வருமானவரித்துறை எச்சரிக்கை!!

You are currently viewing இலத்திரனியல் திருடர்கள் பற்றி அவதானம் தேவை! வருமானவரித்துறை எச்சரிக்கை!!

நோர்வேயில் தற்போது, 2019 ஆம் ஆண்டிற்கான வருமானவரி தொடர்பான ஆவணங்கள் இலத்திரனியல் மூலம் மக்களுக்கு அனுப்பிவைக்கப்படும் நிலையில், இதுவிடயம் தொடர்பில், இலத்திரனியல் திருடர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென நோர்வே வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருமானவரித்துறையிலிருந்து அனுப்பப்படுவது போன்ற போலியான மின்னஞ்சல்களை மக்களுக்கு அனுப்பும் இலத்திரனியல் திருடர்கள், மக்களின் வங்கிக்கணக்குகளின் இரகசிய கடவுச்சொற்களை பெற்று, அதன்மூலம் வங்கி வைப்பிலிருக்கும் மக்களின் பணத்தினை மோசடி செய்ய முயற்சிப்பதாக வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருமானவரித்துறை தொடர்பான ஆவணங்களை தாம் ஒருபோதும் மின்னஞ்சல் மூலமாக அனுப்புவதில்லையென தெரிவித்திருக்கும் வருமானவரித்துறை, மேற்படி மோசடி முயற்சிகளையிட்டு மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமெனவும், எக்காரணம் கொண்டும், வாங்கிக்கணக்குகள் தொடர்பான விடயங்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது குறுந்தகவல் மூலமாகவோ பகிரவேண்டாம் எனவும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பகிர்ந்துகொள்ள