இளையோருக்கான உலகக் கோப்பை : பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்!

  • Post author:
You are currently viewing இளையோருக்கான உலகக் கோப்பை : பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்!

இளையோருக்கான உலகக் கோப்பை துடுப்பாட்ட போட்டியில், பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது. இதன்படி அந்த அணி இந்தியாவுடன் 4-ந்தேதி மோதவுள்ளது.

113-வது இளையோருக்கான உலகக் கோப்பை துடுப்பாட்ட போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகின்றது. இதில் பெனோனியில் நேற்று நடந்த 4-வது கால்இறுதியில் ஆசிய அணிகளான பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதின.

நாணய சுழட்சியில் ஜெயித்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 49.1 பந்து பரிமாற்றங்களில் 189 ஓட்டங்களுடன் சுருண்டது. அதிகபட்சமாக அணித்தலைவர் பர்ஹான் ஜாஹில் 40 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமிர் கான் 3 இலக்குகளும், பஹத் முனிர் 2 இலக்குகளும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 41.1 பந்து பரிமாற்றங்களில் 4 இலக்குகளுக்கு 190 ஓட்டங்கள் சேர்த்து 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. தொடக்க ஆட்டக்காரர் முகமது ஹூரைரா அரைசதம் (64 ஓட்டங்கள்) அடித்தார்.

முன்னாள் வெற்றியாளரான பாகிஸ்தான் அணி அரைஇறுதியில் பரம போட்டியாளரான நடப்பு வெற்றியாளரான இந்தியாவுடன் 04.02 அன்று போட்செப்ஸ்ட்ரூமில் மோதுகிறது. 6-ந்தேதி நடக்கும் மற்றொரு அரைஇறுதியில் வங்காளதேசம்-நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன.

பாகிஸ்தான் அணித்தலைவர் ரோகைல் நசிர் கூறுகையில், ‘இந்தியாவுக்கு எதிராக மோதுவது என்பது எங்களுக்கு மற்றொரு சாதாரண ஆட்டம் தான். இந்தியா சிறந்த அணி. அவர்களுக்கு எதிராக நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். இன்றைய கால்இறுதியின் போது ரசிகர்கள் எங்களை மிகவும் உற்சாகப்படுத்தினர். அரைஇறுதி ஆட்டத்திலும் இதே போன்று ரசிகர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

பகிர்ந்துகொள்ள