ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்!

  • Post author:
You are currently viewing ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்!

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேர் கொல்லப்பட்டனர். 

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ள இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது ; “ பதில் தாக்குதல் நடத்தும் விதமாக, அமெரிக்காவின் சொத்துகளைத் தாக்கப்போவதாக ஈரான் பேசிக் கொண்டிருக்கிறது. அப்படித் தாக்கப்படும்பட்சத்தில் எங்களது எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும்.  ஈரானின் முக்கிய 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்

பகிர்ந்துகொள்ள