ஈரானில் பத்திரிகையாளருக்கு தூக்குத்தண்டனை!

You are currently viewing ஈரானில் பத்திரிகையாளருக்கு தூக்குத்தண்டனை!

ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட பத்திரிகையாளர் ஒருவருக்கு அந்த நாடு தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளது.

ருகொல்லா ஜாம் என்ற பத்திரிகையாளரையே ஈரான் அரசாங்கம் தூக்கிலிட்டுள்ளது.
ஈரானில் கிளர்ச்சியை உருவாக்குவதற்காக தகவல் செயலியை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஈரான் அரசாங்கம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

அமாட் நியுஸ் என்ற அரசாங்கத்திற்கு எதிரான இணையத்தளத்தை நடத்திய ருகொல்லா ஜாம் கிளர்ச்சியை தூண்டினார் என ஈரான் அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

பிரான்சில் வசித்துவந்த அவர் கடந்த வருடம் ஈராக் சென்றவேளை கைதுசெய்யப்பட்டார்.
அவருடைய அமாம் செய்தி சேவையை டெலிகிராமில் மில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.


குறிப்பிட்ட செயலி ஈரானில்  கிளர்ச்சிகள் குறித்த படங்களையும் செய்திகளையும் வெளியிட்டு வந்துள்ளது.
ஈரான் அரசாங்கம் இந்த செயலியை முடக்கிய போதிலும் அது பின்னர் வேறு ஒரு பெயரில் வெளியாகியிருந்தது.


பத்திரிகையாளருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை கருத்து சுதந்திரம் பத்திரிகை சுதந்திரத்தின் மீது மோசமான தாக்குதல் என பிரான்ஸ் கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள