ஈ.பி.டி.பிக்கு பணம் வழங்கிவிட்டு கிளிநொச்சியில் மணல் அகழ்வு தொடர்கிறது!

  • Post author:
You are currently viewing ஈ.பி.டி.பிக்கு பணம் வழங்கிவிட்டு கிளிநொச்சியில் மணல் அகழ்வு தொடர்கிறது!

சிறிலங்கா பொலிஸார் மற்றும் துணை இராணுவ ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி இன் ஆதரவுடன் கிளிநொச்சியில் மணல் அகழ்வு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். 

புதுவருட தினமான நேற்றும் (01) சுமார் 40 இற்கு மேற்பட்ட உழவு இயந்திரங்கள் மற்றும் டிப்பர் வாகனங்களில் மணல் அகழ்ந்து செல்லப்பட்டது என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். 

கிளிநொச்சியில் மணல் அகழ்விற்கு தடை என ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய போதிலும் எந்தத் தடையும் இன்றி இங்கு மணல் அகழ்வு தொடர்கின்றத என மக்கள் தெரிவிக்கின்றனர். 

அண்மையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றபோது, கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது. இதைத் தடுக்க பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதும் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இந்த நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் புதிய ஒருங்கிணைப்புக் குழுக் தலைவர் மற்றும் அதில் கலந்துகொண்ட பிரதிநிதிகளால், கிளிநொச்சி மாவட்டத்தின் எந்த இடத்திலும் மண் அகழ்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என தீர்மானம் திறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானமும் எழுத்தில் அனவத்துத் தரப்பிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

ஈ.பி.டி.பிக்கு பணம் வழங்கிவிட்டு கிளிநொச்சியில் மணல் அகழ்வு தொடர்கிறது! 1

இதையும் மீறி நேற்று 40 இற்கு மேற்பட்ட வாகனங்களில் மணல் கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறு கொண்டு செல்லப்படும் மணல் லோட் ஒன்றிற்கு இவ்வளவு பணம் என பொலிஸாருக்கு வழங்கப்படுகின்றது என மக்கள் தெரிவிக்கின்றனர். 

ஈ.பி.டி.பி ஆதரவாளர்களும் எந்தவித தடையும் இன்றி இங்கு மணல் அகழ்வை மேற்கொள்கின்றனர் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தச் சட்டவிரோத செயற்பாட்டால் எதிர்காலத்தில் இரணைமடுக் குளம் உடைப்பெடுத்து மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் எனவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள