உக்ரைனின் இரண்டாவது பெரிய நகருக்குள் நுழைந்த ரஷிய படைகள்!

You are currently viewing உக்ரைனின் இரண்டாவது பெரிய நகருக்குள் நுழைந்த ரஷிய படைகள்!

ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகின்றது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

இந்நிலையில் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

நேற்று ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைன் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தற்போது ரஷியாவின் வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் நுழைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

கார்கிவ் பகுதிக்குள் நுழைந்த ரஷிய படைகள் அங்குள்ள ஒரு மருத்துவமனையை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.

அதேசமயம் உக்ரைன் மற்றும் ரஷியா இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் ரஷிய வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments