உக்ரைனின் கிரிமியா பகுதியை கைப்பற்றியதன் வெற்றி விழாவை கொண்டாடிய புடின்!

You are currently viewing உக்ரைனின் கிரிமியா பகுதியை கைப்பற்றியதன் வெற்றி விழாவை கொண்டாடிய புடின்!

உக்ரைன் மீதான படையெடுப்பு நீடித்துவரும் நிலையில், உக்ரைனின் கிரிமியா பகுதியை கைப்பற்றியதன் வெற்றி விழாவை பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் புடின் கொண்டாடியுள்ளார். தலைநகர் மாஸ்கோவின் லுஷ்னிகி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் போர் குறித்து பெருமையாகவும் புடின் பேசியுள்ளார். ரஷ்யப் படைகள் உக்ரைனின் தெற்குப் பகுதியான கிரிமியாவைக் கைப்பற்றியதன் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு புடின் இந்த விழாவை முன்னெடுத்துள்ளார்.

சுமார் 200,000 க்கும் அதிகமான மக்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர் எனவும், ஆனால் எண்ணிக்கையை சரிபார்க்க முடியவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்டேடியத்தின் உத்தியோகபூர்வ கொள்ளளவு 81,000, ஆனால் வெளியில் பெரிய கூட்டமும் இருந்தது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குறித்த விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு, மாகாண நிர்வாகம் ஊழியர்களை கட்டாயப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, பாடசாலைகளில் கிரிமியா தொடர்பில் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கவும் அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்ய இராணுவத்தை பெருமைப்படுத்தியுள்ளார். மேலும், தேவைப்படும்போது, தங்கள் உடல்களை கேடையமாக மாற்றி எதிரிகளின் தோட்டாக்களிலிருந்து சகோதரர்களைப் போல ஒருவரையொருவர் பாதுகாக்கிறார்கள். அத்தகைய ஒற்றுமை நீண்ட காலமாக நம்மிடம் இல்லை எனவும் இராணுவ வீரர்கள் தொடர்பில் புடின் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, ரஷ்ய துருப்புக்கள் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் இனப்படுகொலையில் இருந்தும் மக்களை பாதுகாத்து வருகின்றனர் என்றார். விளாடிமிர் புடினின் இந்த உரை, நாடு முழுவதும் முக்கிய செய்தி ஊடகங்களில் நேரலை செய்யப்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments