உக்ரைனுக்கான இராணுவ உதவியாக சுமார் 500 மில்லியன் யூரோக்கள்-ஐரோப்பா

You are currently viewing உக்ரைனுக்கான இராணுவ உதவியாக சுமார் 500 மில்லியன் யூரோக்கள்-ஐரோப்பா
உக்ரைனுக்கான இராணுவ உதவியாக சுமார் 500 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் 11 மாதங்களை கடந்து உக்ரைனின் எல்லை பகுதி நகரங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ரஷ்யாவின் ராணுவ தாக்குதலை சமாளித்து எதிர்ப்பு தாக்குதலை நடத்த உக்ரைன் மேற்கத்திய நாடுகளிடம் தொடர்ந்து உதவி கோரி வருகிறது

அந்த வகையில் சமீபத்தில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சேலஞ்சர் 2 டாங்கிகள் மற்றும் கூடுதல் பீரங்கி அமைப்புகள் வழங்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல உக்ரைனுக்கு லெக்லெர்க் (Leclercs) டாங்கிகளை பிரான்ஸ் அனுப்புவதற்கான வாய்ப்பை பிரான்ஸ் மறுக்கவில்லை என்று அந்த நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நேற்று ஜேர்மன் ஜனாதிபதி ஸ்கோல்ஸ் உடன் இணைந்து கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் உக்ரைனுக்கு 500 மில்லியன் யூரோக்களை இராணுவ உதவியாக அனுப்ப ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டதாக முக்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

உக்ரைனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவப் பயிற்சி பணியின் ஒற்றை பகுதியாக, ” அபாயம் அளிக்காத உபகரணங்களுக்கு” மேலும் 45 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படும் என்று அதன் தூதர்களில் ஒருவர் தெரிவித்தார்.

முதலில் இந்த தொகுப்பை ஹங்கேரி மறுத்து இருந்தாலும், தற்போது இந்த முடிவை ஹங்கேரி அங்கீகரித்துள்ளது.

ஆனால் அதிக பொருளாதார தடைகள் அதிலும் குறிப்பாக அணுசக்தியில் மாஸ்கோவுடன் அதன் ஒத்துழைப்பை கட்டுப்படுத்தும் எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதாக சமிக்ஞை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments