உக்ரைன் தலைநகர் கீவ் மீது இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு 200,000 வீரர்களுடன் ரஷ்யா தயார்!

You are currently viewing உக்ரைன் தலைநகர் கீவ் மீது இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு 200,000 வீரர்களுடன் ரஷ்யா தயார்!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு 200,000 வீரர்களுடன் ரஷ்யா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா இன்னொரு மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு தயாரெடுத்து வருவதை கசிந்த தரவுகளின் அடிப்படையில் உக்ரைன் முதன்மை தளபதி ஒருவர் எச்சரித்துள்ளார்.

புதிதாக திரட்டப்பட்ட 200,000 நபர்களை வீரர்களாக உருமாற்றி, விளாடிமிர் புடின் ஒரு புதிய தாக்குதலுக்கு வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என தளபதி Valery Zaluzhny தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைனுக்குள் அதிரடியாக புகுந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை 175,000 என கூறப்பட்டுவரும் நிலையில், தற்போது மாபெரும் படையுடன் விளாடிமிர் புடின் இரண்டாவது தாக்குதலுக்கு தயாராகிறார் என தளபதி Valery Zaluzhny சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனவரி கடைசி வாரத்தில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில், அதுவும் இல்லை என்றால் கட்டாயம் மார்ச் மாதம் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படும் என கூறியுள்ள அவர், நாம் கண்டிப்பாக அதற்கு தயாராக வேண்டும் என்றார்.

பெலாரஸ் நாட்டில் இருந்து நேரிடையாக கீவ் மீது இந்த தாக்குதல் தொடங்கும் எனவும், கிரிமியாவில் இருந்து கூட தாக்குதல் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த இக்கட்டான கட்டத்தில் மேற்கத்திய நட்பு நாடுகள், உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளித்து உதவ முன்வர வேண்டும் எனவும் தளபதி Valery Zaluzhny கோரிக்கை விடுத்துள்ளார்.

முதற்கட்டமாக 300 டாங்கிகள், 600- 700 IFV, 500 howitzers தேவைப்படுவதாகவும் அவர் பட்டியலிட்டுள்ளார். கடந்த பிப்ரவரியில் களமிறக்கப்பட்ட ராணுவமாக இது இருக்காது, தற்போது களமிறக்கப்படுபவர்கள், உக்கிரமாக போருக்கு தயாராகி வருபவர்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

வெளிவரும் தகவல்கள் அடிப்படையில், உக்ரைன் போரில் இருந்து ரஷ்யா பின்வாங்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே தெரியவருகிறது என்றார். உக்ரைனும் தனது பங்கிற்கு தயாராகி வருகிறது என குறிப்பிட்டுள்ள தளபதி Valery Zaluzhny உரிய திட்டங்கள் வகுக்கப்படுகிறது என்றார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments