உக்ரைன் விவகாரத்தில் வினைத்திறனில்லாத ஐ.நா.சபை…?

You are currently viewing உக்ரைன் விவகாரத்தில் வினைத்திறனில்லாத ஐ.நா.சபை…?

உக்ரைன் விவகாரத்தில் காத்திரமான செயற்பாடுகளை ஆற்ற முடியாத நிலையில் ஐ. நா. சபை உள்ளதா என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்படுமளவுக்கு, ஐ.நா. சபையில் ரஷ்யாவின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறதா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

உக்ரைன்மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட நாளிலிருந்து வினைத்திறனற்ற நிலையில் ஐ.நா.சபை உள்ளதாகவும், ரஷ்யாவுக்கெதிராக கொண்டுவரப்படும் அனைத்து தீர்மானங்களையும், தனது “வீட்டோ” அதிகாரம் மூலம் ரஷ்யா தோற்கடித்து வருவதோடு, ஐ. நா.சபையிலும், அதன் பாதுகாப்புச்சபையிலும், ராஜதந்திரிகளோடு தனிப்பட்ட சந்திப்புக்களை நடத்தும் ரஷ்யா, தனக்கு ஆதரவான பிரச்சார வேலைகளை கனகச்சிதமாக செய்துவருவதோடு, அமெரிக்காவின் உதவியோடு உக்ரைன் ஆபத்தான உயிரியல் / இரசாயன ஆயுதங்களையும் தயாரிக்கிறது என்ற கருத்துருவாக்கத்தையும் செய்வதில் முனைப்பாக இருக்கிறது என, “International Crisis Group” என்ற அமைப்பை சேர்ந்த “Richard Gowan” தெரிவிக்கிறார்.

உக்ரைன் விடயத்தின் செயலிழந்திருக்கும் ஐ.நா.சபை, தனது வினைத்திறன் நிலைக்கு இனிமேல் உயர முடியுமா என்பது சந்தேகமே எனவும் கருதும் “Richard Gowan”, உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அமெரிக்காவுக்கும், சீனா மற்றும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் ஏறத்தாழ முறிவடைந்த நிலைக்கு வந்துவிட்டதாகவும், கடந்த வருடம் ஐ.நா.சபையின் பாதுகாப்புச்சபையில் முதன்மை பெற்றிருந்த மியான்மார், எத்தியோப்பியா விடயங்களில் சீனாவும், ரஷ்யாவும் ஒன்றுபட்டு நின்றதோடு, இவ்விடயத்தில் பாதுகாப்புச்சபையை வினைத்திறனில்லாத நிலைமைக்கு தள்ளியிருந்ததை நினைவுபடுத்துகிறார்.

தவிரவும், ஐ.நா.சபையின் பொதுச்சபையும், பாதுகாப்புச்சபையும் வீட்டோ அதிகாரமுள்ள நாடுகளால் வினைத்திறனேதும் இல்லாத நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைனிய அதிபரும் அண்மையில் விசனம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments