உயர் பாதுகாப்பு வலய பிரகடனம்- மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்!

You are currently viewing உயர் பாதுகாப்பு வலய பிரகடனம்- மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்!

உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தியமை எந்த நியாயமும் அடிப்படையும் இல்லாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கும், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறும் பிரகடனத்தை வெளியிடுவதற்குமான அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்துவதற்கு அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டத்தை ஏற்க முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்துவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 23 திகதியிட்ட எண் 2298/53ஐக் கொண்ட வர்த்தமானியை வாபஸ் பெறுமாறும் அரசாங்கத்தை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

தேசிய சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மற்றும் தேசிய மனித உரிமைகள் விதிமுறைகள் மற்றும் தரநிலைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும், அந்த விதிமுறைகளை மீறும் அறிவிப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments