உலகநாடுகளின் “கொரோனா” ஆய்வுகளை ஒன்றிணைக்கும் நோர்வே!

You are currently viewing உலகநாடுகளின் “கொரோனா” ஆய்வுகளை ஒன்றிணைக்கும் நோர்வே!

“கொரோனா” வுக்கெதிரான மருந்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் உலக நாடுகளை அத்தனையையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நோர்வேயின் சுகாதாரத்துறை அமைச்சர் “Bent Høie” தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அனுசரணையோடு, “கொரோனா” தொடர்பில் நடைபெறும் சர்வதேச ஆய்வுகள் மற்றும் கற்கைநெறிகள் அனைத்தையும் ஒன்றிணைப்பதோடு, ஆய்வுகளின் பின்னரான சோதனை முயற்சிகளை நோர்வே முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகளில் சோதிக்கும் வழிவகைகளையும் ஒன்றிணைப்பதில் உலகிலேயே முதன்மை நாடாக நோர்வே திகழ்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“மலேரியா” மற்றும் “எபோலா” கிருமிகளுக்கெதிராக உருவாக்கப்பட்ட மருந்துகள் உட்பட மூன்று வெவ்வேறு மருந்துகழும் இந்த ஆய்வுகளில் பயன்படுத்தப்படவிருப்பதாகவும், “கொரோனா” வால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சுயவிருப்பின் பேரில் இந்த ஆய்வுகளில் கலந்துகொள்ளலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள