“உலகம் முழுவதும் 300’000 கொவிட்-19 நோயாளிகள்!”

You are currently viewing “உலகம் முழுவதும் 300’000 கொவிட்-19 நோயாளிகள்!”

“உலகம் முழுவதும் வெவ்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும், கொறோனா எண்ணிக்கைகள் நாளைக்கு நாள் அதிகரித்துக் கொள்கின்றன. இன்று (22.03.20) 300’000 பேருக்கு மேற்பட்டோருக்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை ஏறத்தாழ 13’000 பேர் கொவிட்-19 காரணமாக உயிரிழந்துள்ளனர். 95’000ற்கும் மேற்பட்டவர்கள் இன்று வரை குணமடைந்துள்ளார்கள். 169 நாடுகளில் கொறோனா தொற்றியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.” என அமெரிக்காவின் பல்கலைக்கழகம் யோன் கோப்கின்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

“உலகம் முழுவதும் 300’000 கொவிட்-19 நோயாளிகள்!” 1

அமெரிக்காவில் ஒரு வாரத்திற்குள் கொறோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்பொழுது 24’000 பேருக்கும் மேற்பட்டவர்களிற்கு கொறோனா தொற்றியுள்ளதையும் யோன் கோப்கின்ஸ் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Translation: R.Nithurshana
Source: 20min

“உலகம் முழுவதும் 300’000 கொவிட்-19 நோயாளிகள்!” 2
பகிர்ந்துகொள்ள