உலகளவில் கொரோனா : பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது!

  • Post author:
You are currently viewing உலகளவில் கொரோனா : பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது!

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டி உள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.

சர்வசேத அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ள போதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது

அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்க உள்ள நிலையில் இதுவரை, 55,415 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவை அடுத்து இத்தாலியில் இதுவரை 26,644 பேரும், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் இதுவரை முறையே 23521, 22856 மற்றும் 20732 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

பகிர்ந்துகொள்ள