உலகின் தலைவிதியை ஜி-07 நாடுகள் போன்ற சிறு குழுக்கள் தீர்மானிக்க முடியாது என சீறுகிறது சீனா!

You are currently viewing உலகின் தலைவிதியை ஜி-07 நாடுகள் போன்ற சிறு குழுக்கள் தீர்மானிக்க முடியாது என சீறுகிறது சீனா!

உலகின் தலைவிதியை ஜி-07 போன்ற ஒருசில நாடுகள் இணைந்து மட்டும் தீா்மானிக்கும் காலம் மலையேறிவிட்டது என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் சவால்களைச் சமாளிக்க ஜி-07 நாடுகள் இணைந்து பணியாற்றுவதென பிரிட்டனில் இடம்பெற்றுவரும் ஜி-07 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டின் சனிக்கிழமை தீா்மானிக்கப்பட்டது.

இந்த விவாதத்தின்போது சீனாவின் சவால்களைச் சமாளிக்க ஜி-07 நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என சீனா தொடர்பான விவாதத்துக்குத் தலைமை தாங்கிய ட்ரூடோ அழைப்பு விடுத்தார்.

ஜி-07 நாடுகளின் தலைவர்கள் சுமார் 40 டிரில்லியன் டொலர் பொருளாதார செல்வாக்கைக் கட்டுப்படுத்துகின்றனர். இந்நிலையில் சீனா தொடர்பான ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்குவதில் அவர்கள் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் ஜி-07 நாடுகளின் இந்த முடிவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள லண்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், உலகின் தலைவிதியை ஒரு ஜி-07 போன்ற ஒருசில நாடுகள் இணைந்து மட்டும் தீா்மானிக்கும் காலம் மலையேறிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

உலகின் செல்வந்த நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜி-7 கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.

சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய கொள்கைகளோடு தங்கள் சமூகம் இருப்பதாக இந்த நாடுகள் தங்களை கருதிக் கொள்கின்றன. இந்தப் பண்புகள் இல்லாத நாடுகள் என்று தாங்கள் கருதும் நாடுகளை இவர்கள் ஜி-7 அமைப்பில் சேர்த்துக்கொள்வதில்லை.

முதன்முதலில் 1975-இல் உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடி சந்தித்தன.

அதற்கு அடுத்த ஆண்டு கனடா இந்த அமைப்பில் உறுப்பினரானது. 1998- இல் உறுப்பினரான ரஷ்யா உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை தன்னுடன் 2014-இல் இணைத்துக் கொண்டதால் ஜி-07 கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதன்பின் ஜி-8 மீண்டும் ஜி-7 ஆனது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments