உலகின் தொன்மையானது தமிழர்களின் கலை மற்றும் கலாசாரம்”!

You are currently viewing உலகின் தொன்மையானது தமிழர்களின் கலை மற்றும் கலாசாரம்”!

அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலை டீன் டில்லிஸ் டீ ஆன்டோனியோ தெரிவித்தார்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அமைந்துள்ள கீழடி அகழாய்வு பொருட்களை பார்வையிட்ட அவர் கூறியதாவது:- தமிழர்களின் கலை, கலாசாரம் உலகளவில் தொன்மையானது. கீழடி அகழாய்வு மற்றும் அங்கு கிடைத்த பொருட்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. இதன் வரலாற்றை அறிந்தும், தமிழ்ச் சங்க காலம் முதல் பயன்படுத்திய பொருட்களை காண்பதும் வியப்பாக உள்ளது.

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை முதன் முதலாக நேரில் பார்த்தேன். கை களால் காளைகளின் திமில்களை வீரர்கள் அஞ்சாமல் பிடித்து வீரத்தை வெளிப்படுத்தியது அபாரம். என்றார்.

மதுரை காமராஜ் பல்கலை தமிழ்த்துறை தலைவர் சத்தியமூர்த்தி, கீழடி பொறுப்பாளர் ஆசைத்தம்பி, சீன பேராசிரியர் ஷா வங்யூவே, ஹூஸ்டன் இருக்கைக்கான ஒருங்கிணைப்பாளர் நிமல்ராகவன் உடனிருந்தனர்.

பகிர்ந்துகொள்ள