உலகின் மிக நீளமான நிலத்தடி சுரங்கப்பாதை நோர்வேயில் திறந்து வைப்பு!

You are currently viewing உலகின் மிக நீளமான நிலத்தடி சுரங்கப்பாதை நோர்வேயில் திறந்து வைப்பு!

உலகின. மிக நீளமான நிலத்தடி போக்குவரத்து சுரங்கப்பாதை நோர்வேயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. «Ryfylke» மாகாணத்தையும், «Stavanger» நகரத்தையும் இணைக்கும் இச்சுரங்கப்பாதை, 14.4 கிரோமீட்டர் நீளமானதாகவும், கடல்மட்டத்திலிருந்து 292 மீட்டர்கள் ஆழத்திலும் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் ஏழுவருடங்களுக்கு முன் சுரங்கவேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, இன்று 30.12.2019 நண்பகல் 12:00 மணிக்கு, பொதுப்போக்குவரத்துக்காக திறந்துவிடப்பட்ட இச்சுரங்கப்பாதைக்கான செலவு சுமார் 8.1 மில்லியார்டர் குரோணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக நீளமான நிலத்தடி சுரங்கப்பாதை நோர்வேயில் திறந்து வைப்பு! 1
பகிர்ந்துகொள்ள