உலகையே உலுக்கிய செம்மணி புதைகுழிகள்!

You are currently viewing உலகையே உலுக்கிய செம்மணி புதைகுழிகள்!

1996ம் புரட்டாதி 7ம். நாள் யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி பிறகு கழுத்தை நெறித்து கொன்றனர். கிருஷாந்தியைத் தேடிச்சென்று இராணுவத்தினரிடம் கேட்டபோது தாய் இராசம்மாள், சகோதரர் பிரணவின் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்த வழக்கில் ஐந்து இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கியது நீதிமன்றம். அதில் ‘சோமரத்ன இராசபக்சே’ என்ற இராணுவ வீரன் அளித்த வாக்கு மூலம்:

“யாழ் குடாவில் பரவலாக கைது செய்து காணமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் சித்திரவதி செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் இரவில் எடுத்துச் செல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்படுவதுண்டு. 300 லிருந்து 400 பேர் வரை புதைத்த புதை குழிகளை என்னால் காட்டமுடியும்”.

பகிர்ந்துகொள்ள