உலக சுகாதார அமைப்பு : கொரோனா வைரஸ் பரவ உகான் சந்தையும் ஒரு காரணம்!

  • Post author:
You are currently viewing உலக சுகாதார அமைப்பு : கொரோனா வைரஸ் பரவ உகான் சந்தையும் ஒரு காரணம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதில் சீனாவின் உகான் சந்தையின் பங்கு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சீனா எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், கொரோனா பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை மறைந்த்ததாக சீனா மீது உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதில் உலக சுகாதார அமைப்பும் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதேபோல், உலக சுகாதார அமைப்பும் கொரோனா விவகாரத்தில் சீனா சிறப்பாக செயல்பட்டதாக கூறியது.

தற்போது கொரோனா வைரஸை பரப்புவதில் சீனாவின் உகான் சந்தையின் பங்கு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு : கொரோனா வைரஸ் பரவ உகான் சந்தையும் ஒரு காரணம்! 1
Dr. Peter Ben Embarek

உலக சுகாதார அமைப்பின் உணவு பாதுகாப்பு வைரஸ் நிபுணர் Dr. Peter Ben Embarek கூறியதாவது:-

உலக நாடுகளின் இந்த நிலைமைக்கு உகான் சந்தையும் ஒருகாரணம் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் எந்தளவுக்கு காரணம் என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த வைரஸ் உகான் சந்தையில் இருந்து வந்ததா அல்லது தற்செயலாக வைரஸ் உருவானதா எனக் கூறமுடியவில்லை. ஆனால் இந்த வைரஸ் சந்தையிலும் அதைச் சுற்றியும் காணப்பட்டன. வைரஸ் பரவாமல் தடுக்க சீனா ஜனவரி மாதம் தான் சந்தையை மூடியது என கூறினார்.

பகிர்ந்துகொள்ள