உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அறிவிப்பு!

You are currently viewing உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதன்படி இன்று 5 ஆம் திகதி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை தகுதியான வாக்காளர்களிடமிருந்து தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது

22 ஆம் திகதிக்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது என்பதை விண்ணப்பதாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள், சேவையாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், உரிய பிரதேசத்தில் சேவையில் ஈடுப்படும் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், சேவையாளர்கள், தபால் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள், புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள், நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்படும் முப்படையினர், பொலிஸ் திணைக்களம் மற்றும் சிவில் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் தேர்தல் நடைபெறும் தினத்தில் வாக்களிக்க முடியாத நிலையில் தேர்தல் நடவடிக்கையில் ஈடுப்படும் அரச அதிகாரிகள் தபால் மூலமாக வாக்களிக்க தகுதிப் பெற்றவர்களாக கருதப்படுவர்.

தபால் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ள காலத்திற்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத்தை முன்வைக்கும் நபரின் ஆவணங்களை உறுதிப்படுத்தும் அதிகாரி பரிசீலனை செய்ய வேண்டும். தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பபடிவத்தை முழுமைப்படுத்துவதற்கான 2022ஆம் ஆண்டு வாக்காளர் தொடர்பான விபரங்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தளம் (www.electiolu.gov.lk) ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

அல்லது 1919 தொலைபேசி இலக்கம் ஊடாக அரச தகவல்கள் மத்திய நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.இதற்கு மேலதிகமாக சகல மாவட்ட செயலாளர் காரியாலயம் (கச்சேரி) சகல மாவட்ட தேர்தல் காரியாலயம்,சகல பிரதேச செயலாளர் காரியாலயம்,சகல கிராம சேவையாளர் காரியாலயம் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். தேர்தல்கள் ஆணைக்குழுவின் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளுக்கு அமைய தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

வாக்காளர் பெயர் பட்டியலில் தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்படாத வேட்பாளர் சகல மாவட்ட செயலாளர் காரியாலயம் (கச்சேரி) சகல மாவட்ட தேர்தல் காரியாலயம்,சகல பிரதேச செயலாளர் காரியாலயம்,சகல கிராம சேவையாளர் காரியாலயம் ஊடாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments