ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாயிகள் மிரட்டப்பட்டுள்ளார்கள்!

You are currently viewing ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாயிகள் மிரட்டப்பட்டுள்ளார்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு முழுமையாக அரசின் மானிய உரம் கிடைக்கவில்லை என்றும் மானிய உரத்தினை விலைகொடுத்து வாங்கவேண்டிய நிலையிலும் இருப்பதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாயிகள் காவல் துறையினர் அழைக்கப்பட்டு மிரட்டப்டப்டுள்ளதுடன் கமாக்கார அமைப்பின் தலைவர்களால் மிரட்டப்பட்டுள்ளார்கள்.

முத்தையன் கட்டு,ஒட்டுசுட்டான் பகுதிளில் அரசாங்கம் கொடுத்த மானிய உரம் மூன்று தனியாரிடம் விற்பனையாகியுள்ளமை அதனை வாங்கிய விவசாயிகள் ஆதாரபூர்வமாக ஏனைய விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளமையினை தொடர்ந்து மானிய உரம் கிடைக்காத விசாயிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இன்னிலையில் இவ்வாறு கருத்து தெரிவித்த வித்தியா புரத்தினை சேர்ந்த விவசாயி ஒருவர் ஒட்டுசுட்டான் பொலீசாரால் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒட்டுசுட்டான் கமநல சேவைத்திணைக்கள அதிகாரியிடம் மன்னிப்பு கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
குறித்த விவசாயி எவரையும் இனம்காட்டி குற்றம் சாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னிலையில் மறுபக்கத்தில் ஒட்டுசுட்டான் முத்துதையன் கட்டு கமக்கார அமைப்பின் தலைவர் விவசாயிகளை மிரட்டியுள்ளார்.

உரம் தொடர்பிலோ ஏனை அரசாங்கம் வழங்கம் மானியங்கள் தொடர்பிலோ  ஊடகங்களுக்க கருத்து தெரிவித்தால் எந்த மானியமும் கிடைக்காது ஒட்டுசுட்டான் கமநல சேவைத்திணைக்கள அதிகாரியிடம் நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தொனியில் மிரட்டல் விடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

அரசாங்கத்தின் மானிய உரம் கிடைக்கவில்லை என்றும் மானியத்திற்காக வழங்கப்பட்ட நிலக்கடலை தரம் இல்லை என்றும் உண்மையினை ஊடகத்திற்கு தெரிவித்தமையினால் அதற்காக எவரையும் பெயர்குறிப்பிட்டோ அல்லது சுட்டிக்காட்டியோ தகவல் கொடுக்கப்படவில்லை ஆனால் அதனை செய்தவர்கள் தாங்கள்தான் என்ற பாணியில் தம்மை மிரட்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள