எகிறிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள்! வாழ்க்கைச்செலவு அதிகரித்த நாடாகும் நோர்வே!!

You are currently viewing எகிறிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள்! வாழ்க்கைச்செலவு அதிகரித்த நாடாகும் நோர்வே!!

நோர்வேயில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் 01.02.2023 இலிருந்து கடுமையாக உயர்ந்துள்ளன. நாளாந்த உணவுப்பாவனைக்கான மூலப்பொருட்கள் உட்பட, அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் சுமார் 10 – 15 சதவீதம் அதிகரித்துள்ளன.

குளிரூட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்ட பொருட்கள் சுமார் 15 சதவீதம் அதிகரிப்பதாகவும், அதிகரித்துள்ள மின்விலை காரணமாகவே இந்த விலையதிகரிப்பு எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இவ்வாறன அதிரடி விலையதிகரிப்பு சாதரண வருமானம் பெரும் மக்களை மிகவும் பாதிக்குமெனவும், ஏற்கெனவே எரிபொருட்கள், மின்சாரம், போக்குவரத்து, வரிகள் உள்ளிட்டவைக்கான விலைகள் வானளவு உயர்த்தப்பட்டு வாழ்க்கைச்செலவு  அதியுச்சத்தில் இருக்கும் நிலையில் மேற்படி அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையுயர்வு சமூகத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகளையும், பொருளாதார இழிநிலையையும் மக்களிடையே ஏற்படுத்துமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments