எஜமானரை தேடி நாளாந்தம் வைத்தியசாலைக்கு வந்த செல்லப்பிராணி!

You are currently viewing எஜமானரை தேடி நாளாந்தம் வைத்தியசாலைக்கு வந்த செல்லப்பிராணி!

துருக்கியில் வாழும் பெண்மணியொருவரின் வளர்ப்பு நாய், உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த நாயை வளர்த்து வந்த துருக்கிய பெண்மணி, திடீர் சுகவீனமடைந்ததால் அவர் உடனடியாக உயிர்காப்பு வாகனத்தில் (Ambulance) வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். அவர் வளர்த்து வந்த செல்ல நாயும் அவரோடு கூடவே வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நாயை வளர்த்து வந்த பெண்மணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதும், அவரது வளர்ப்பு நாய், அவரது மகளிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், மீண்டும் வைத்தியசாலைக்கு தப்பித்து வந்த நாய், தனது எஜமானிக்காக வைத்தியசாலை வாசலிலேயே காத்துகிடந்ததாக சொல்லப்படுகிறது.

தினமும் காலையில் 09:00 மணியளவில் வைத்தியசாலை வாசலுக்கு வரும் குறித்த வளர்ப்பு நாய், மாலை வரை வாசலிலேயே பொறுமையாக காத்திருந்ததாகவும், சுமார் ஒரு வாரகாலமாக தொடர்ந்து இது நடந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இறுதியாக சுமார் ஒரு வார காலத்தின்பின்னதாக, குறித்த வளர்ப்பு நாயின் எஜமானி வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியபோது, கூடவே அவரது வளர்ப்பு நாயும் அவரோடு சேர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள