எரிக் சொல்ஹெய்மை ஆலோசகராக நியமித்தார் ரணில்!

You are currently viewing எரிக் சொல்ஹெய்மை ஆலோசகராக நியமித்தார் ரணில்!

நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மை தனது சர்வதேச காலநிலை ஆலோசகராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது குறித்து எரிக் சொல்ஹெய்ம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“ இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சிறந்த சந்திப்பை முன்னெடுத்தோம். பசுமைப் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் காலநிலைத் தலைமைத்துவத்திற்கான சிறந்த தொலைநோக்குடையவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவரது சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் பெருமிதம் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

எரிக் சொல்ஹெய்மை ஆலோசகராக நியமித்தார் ரணில்! 1

சமாதானத்தூதுவராக நடித்து தமிழ்மக்களை அழிக்க துணைநின்ற வெள்ளை நரிக்கு சிங்கள நரியின் நன்றிக்கடனாக இப்பதவி கொடுக்கப்பட்டுள்ளதாகவே உணரமுடிகிறதாக தமிழ் உணர்வாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த வெள்ளை நரி இனவழிப்பாளியையும் சந்தித்துள்ளது

எரிக் சொல்ஹெய்மை ஆலோசகராக நியமித்தார் ரணில்! 2

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பில் வைத்து சந்தித்து உரையாடியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனும் பங்கேற்றிருந்தார்.

இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தையாளராக எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வழங்கிய பங்களிப்பை மஹிந்த ராஜபக்ஷ நினைவு கூர்ந்தார் மற்றும் மோதலினால் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்ட எதிர்மறையான தாக்கங்கள் குறித்து இவ்விருவரும் கலந்துரையாடினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சர்வதேச காலநிலை ஆலோசகர்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்தமைக்கும் சொல்ஹெய்முக்கு மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments