ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி இந்திய ஜனாதிபதிக்கு தமிழக முதல்வர் கடிதம்!

You are currently viewing ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி இந்திய ஜனாதிபதிக்கு தமிழக முதல்வர் கடிதம்!

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் ராஜிவ் கொலைக் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்துக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து செய்தி மக்கள்தொடர்புத்துறை இயக்குநர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் பிரதமர் திரு ராஜிவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரொபேட் பயஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 09.09.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பியுள்ளதையும் “அந்த அமைச்சரவை தீர்மானித்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவர் அவர்களுக்குத் தான் இருக்கிறது எனக்கூறி, தமிழக ஆளுநர் அவர்கள் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை அனுப்பி வைத்திருப்பதையும்” சுட்டிக்காட்டி 19-05-2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், “மேற்கண்ட ஏழு பேரும் 30 வருடத்திற்கும் மேலாக சிறையில் வாடுகிறார்கள். உச்சநீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீடிக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அனுமதியளித்துள்ளது எனத் தெரிவித்து – ஏழு பேரையும் விடுதலை செய்ய 09-09-2018 அன்று தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மாண்புமிகு குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுதிய கடிதத்தை திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு டி.ஆர்.பாலு அவர்கள் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இன்று நேரில் அளித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments